Views: 187
உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.
வாழ்க்கையில் மனிதனுக்கு மிகவும் வேண்டிய ஒரு குணம், சகிப்புத் தன்மை. நாம் வாழும் உலகம் நமக்காக படைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட உலகத்திலே நாம் வாழுகிறோம். அதனாலெ, தான் நமக்குப் பிடிக்காத சில விசயங்களும், நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தே வருகின்றது. அப்படி கூடி வாழும் ஒரு சமுதாயத்தில், உரிமைகளை கட்டிக் காத்துப் பேணுவது என்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும். அத்தோடு மிகவும் சிரமமான ஒன்றாகும். இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும்தான் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒரு உதாரணத்திற்கு தொடர் வண்டி பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் கடைக் கோடியிலிருந்து நேரடியாக முதல் ஆளாக போக முடியாது. மற்றவர்களின் அவசரத்தை விட, அவர்கள் முன்னால் வந்தவர்கள் என்பதை நீங்கள் சகித்துத் தான் ஆகவேண்டும். முன்னால் வந்தவர் 2 மாதம் கழிச்சு இன்பச்சுற்றலாவிற்குப் பயணச்சீட்டு பெறுபவராகவும், நீங்கள் உயிர் காக்கும் மருத்துவராக இருந்தாலும், பொறுத்தே ஆக வேண்டும்.
சகிப்புத் தன்மை என்பது குடும்பத்திலும், தேவையானது தான், நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சி நேரத்தில் மனைவி தொலைக் காட்சி பார்க்க நினைத்தாலோ/ அல்லது பார்த்தாலோ, அதற்கு இடம் கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் சகிப்புத்தன்மையின் எல்லையே முடிவு செய்யும்.
“திறன் அல்ல தன் – பிறர் செய்யினும், நோ நொந்து,
அறன் அல்ல செய்யாமை நன்று. ” – திருக்குறள் – 157
‘உலகில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களையும் வியந்து பாராட்டி, ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல் மாறாக, இது சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்தப்பட வேண்டும்’ என்று இவ்வறிக்கையில் சகிப்புத்தன்மையின் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.