Views: 112
முன்னர் இந்தியாவில் 130-க்கும் மேல் நாட்டு மாட்டு இனங்கள் இருந்திருக்கிறது. முன்னோர்கள் ஒவ்வொரு மாட்டு இன வகைகளையும் ஒவ்வொரு வேலைக்காகவும், தங்களின் தேவைக்காகவும் பயன்படுத்தி வந்தனர். மாடுகளை வீட்டு விலங்காக பழக்கப்படுத்திய முதல்நாடும் இந்தியாதான். முக்கியமாக காளை இனங்களை காப்பதற்காக உருவாக்கிய வீரவிளையாட்டுதான் இந்த ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு நடக்கும் நாட்களில் காளைகளை கலந்துகொள்ளச் செய்து வருடத்தின் மற்ற நாட்களில் உழவு சார்ந்த தொழிலுக்காகவும், இன விருத்திக்காகவும் பயன்படுத்திக்கொண்டான் மனிதன்.
முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும் நாட்டு மாடுகளும் தான். நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம். திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம். இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாட்டு மாடுகள் இருந்த வரை நம் பொருளாதார சுயசார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம்.நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து… இதுபோன்ற சிற்பங்கள் பல கோவில்களில் காணலாம்..
நாகரிக வளர்ச்சியாலும், ஜெர்சி இன பசுக்கள் வரவாலும் நாட்டு மாட்டின் இனங்கள் படிப்படியாக குறையத் தொடங்கியது. அரசே ஜெர்சி பசுக்களை மேலை நாடுகளில் இருந்து பால் தேவைக்காக இறக்குமதி செய்யத் தொடங்கியது. இதனால் நாட்டு மாட்டு இனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இன்று 35-க்கும் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகிறது. எஞ்சியுள்ள காளைகளின் விபரங்கள் மாநில வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
1. தமிழ்நாடு – பர்கூர், காங்கேயம், புங்கனூர், உம்பளச்சேரி, மயிலை
2. கர்நாடகா – அமிர்த மகால், ஹல்லிகர், கிருஷ்ணா வாலி, மல்நாட் ஹிடா
3. ஆந்திரா – ஓங்கோல், புங்கனூர்
4. கேரளா – வச்சூர்
5. மகாராஷ்டிரா – தாங்கி, தியோனி, கவொலாவோ, ஹில்லார், நிமாரி, சிவப்பு காந்தாரி
6. குஜராத்- கிர், சிவப்பு காந்தாரி
7. ராஜஸ்தான் – காங்ரெஜ், மால்வி, நகோரி, ரதி, தார்ப்பார்க்கர்
8. ஹரியானா – ஹரியானா
9. பஞ்சாப்- சிவப்பு சிந்தி, சாஹிவால்.
10.உத்தரப்பிரதேசம் – கேன்கதா, கேரிகார்க், மேவாதி, பொன்வார், கங்காத்ரி
11. பீகார் – பச்சூர், கங்காத்ரி
12. மேற்கு வங்காளம், சிக்கிம் – சிறி
13. நாகாலாந்து- தோதோ
நாட்டு மாடுகள் மற்றவர் கைகளில்..
———————————-
பிரேசிலில் நம் நாட்டு மாடுகள் லட்ச கணக்கில் வளர்க்கபடுகின்றன.
Clickhere
கேரளாவிலும் தமிழ்நாட்டு நாட்டுமாடுகளை கொண்டு சீரோ பட்ஜெட் பார்மிங் செய்ய கிசான்கேரளா மூலம் பயிற்றுவிக்கிரார்கள்.Clickhere
பாகிஸ்தானில் கூட மரபுபசுவினன்களை காக்க தனி நிர்வாகமே உள்ளது.Clickhere
நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்..? திரு காசி பிச்சை அவர்களின் பேச்சு..Clickhere
இவை மட்டும் இல்லாது அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் பாரத்தின் நாட்டு மாடுகளை கொண்டு கலப்பினம் செய்து பயன்படுத்துகிறார்கள்.
ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாடுகளில் நாட்டு மாடுகளில் கிடைக்கும் பாலுக்கென்று தனி சந்தையே உள்ளது..!