Views: 250
தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம்:
தேவைகள் பூர்த்தியாக ஆசை கொண்டால், வாழ்க்கை இன்பமாகும்.
ஆசைகள் பூர்த்தியாக தேவைகள் கொண்டால், வாழ்க்கை துன்பமாகும்.காதைத் திறந்து கேள் அது மற்றவர் அனுபவம்,
கண்ணைத் திறந்து பார் அது உனக்கு அனுபவம்சிறிய ஓட்டை பெரிய கப்பலை கவிழ்த்து விடும்,
சிறிய வார்த்தை ஒரு நல்ல நட்பையே முறித்து விடும்புத்திசாலி என்பவன் மற்றவன் அனுபவத்தில் கற்றுக் கொள்கிறான்
முட்டாள் என்பவன் தானே அனுபவித்தும் கற்றுக்கொள்கிறதில்லைதினம் ஒரு செடி வளர்வதைப் பாருங்கள் மனம் வளரும்,
தினம் ஒரு மலர் வளர்வதைப் பாருங்கள் மனம் மலரும்கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்”.
உங்கள் கனவுகளை நோக்கிப் பயணிக்க வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. நினைவில் வைத்ததுக்கொள்ளுங்கள் வயது ஒரு இலக்கமே!