Views: 214
விடுகதைகள் படித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதா? இதோ வந்துவிட்டது
- நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன?
- ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்?
- எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?
- தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
- உச்சிக் குடுமிக்காரன், கொள்ளிவச்சா வெடிப்பான் அது என்ன?
- பச்சைக்கிளையில் மஞ்சள் குருவி – அது என்ன?
- பூமியில் சிறந்தது, புனிதர்களை போற்றும் பூ – அது என்ன?
- குரல் இனிப்பு. அவளோ கருப்பு – அது என்ன?
- குழந்தைக்கு எந்தக் கை பலமான கை?
- குடுக்கை நிறைய வைரமணி – அது என்ன?
1. பூனை
2. பம்பரம்
3. செல்பேசி
4. தபால் தலை
5. பட்டாசு
6. எலுமிச்சம்பழம்
7. அன்பு
8. குயில்
9. அழுகை
10.மாதுளம் பழம்