Views: 40
தான் பல இடத்தில் தவறி விழுந்தாலும், தன் பிள்ளை எந்த இடத்திலும் தவறி விழக்கூடாது என நினைக்கும் தெய்வம் அப்பா.
அன்பை உள்ளே வைத்துக் கொண்டு எதிரிப் போல் தெரியும் ஒரே உறவு அப்பா !
‘முடியாது’ என்ற ஒற்றை வார்த்தையில் கொடுத்த செயற்கை வலியால் ‘முடியும்’ என்ற நம்பிக்கையை விதைத்தவர் அப்பா !
கொண்டுவந்தால் தான் தந்தை என்று யார் பொய் சொன்னது தான் கொண்டதை எல்லாம் கொடுப்பவர் தந்தை உண்மை சொல்கிறது !
மகனிடம் தோற்பதை லட்சியமாய் கொண்டவர்! மகன் தோற்றாலும் வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் !
மகன் நடைபயில மகன் வேகத்துக்கு நடப்பவர் ! மகன் ஒடுவதை ஒதுங்கி நின்று ரசிப்பவர் !
முதுமையில் மகன் கரம் பிடித்து குழந்தைப் போல் நடப்பார் அப்பா !
பேரன் பேத்தியிடம் விளையாடும் போது அம்மாவை பாட்டியாக பார்க்கலாம்
பேரன் பேத்தியிடம் விளையாடும் போது அப்பாவை குழந்தையாக தெரிவார் !
அம்மா – அன்பை அன்பாக காட்டுவார்.
அப்பா – அன்பை கண்டிப்பாக காட்டுவார் “மாறாத அன்பு அம்மாவின் அன்பு” என்று திருமணமாகதவன் சொன்னது !
“மாறாத அன்பு அப்பாவின் அன்பு” என்று திருமணமானவன் சொன்னது !
அம்மாவின் அன்பை விட சிறந்த அன்பு உலகில் இருக்கிறதென்றால் அது அப்பாவின் அன்பு!
உங்களைப் போற்ற ஓர் நாள் மட்டும் போதுமா…
அனுதினமும் போற்றப்படவேண்டும் உங்கள் புகழ் பூவுலகம் வாழும் காலம் வரை…!
எமது உடலின் மூலக்கருவாகவும், எமது பெயரின் முதல் பெயராகவும் அமைந்து
எமக்கெல்லாம் நல்வழிகாட்டியாகவும், பாதுகாவலனாகவும் இருந்து அன்போடு எம்மை வளர்த்தெடுத்து நாம் இப் பூவுலகில் பேரோடும் புகழோடும் வாழ வழி அமைத்த அன்புத் தெய்வத்தை
இத் தினத்தில் நினைவு கூர்ந்து அன்போடு உறவாடி மகிழ்வித்து, வணங்கி நல்லாசி பெறுவோம்.
உலகில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் எமது தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்..!!
அப்பா-ஓர் அற்புதமான புத்தகம். வாழ்க வளமுடன்