செவ். ஜூலை 1st, 2025
Mimosa pudica

Views: 870

தொட்டாற்சுருங்கி முழுத்தாவரம் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, ஆகிய சுவைகளைக் கொண்டது. வெப்பத்தன்மையும் கொண்டது. தொட்டாற்சுருங்கி பரந்து விரிந்த வளரியல்பு கொண்ட சிறுகொடி வகைத் தாவரம். தாவரம் முழுவதும் சிறு முட்கள் காணப்படும். இவை, நேராகவோ, வளைந்தோ இருக்கும். இலைகள், சிறகு வடிவமாக கூட்டிலையானவை. தொட்டால் வாடிவிடும் இதன் இலைகளின் சிறப்பான அமைப்பாலேயே இது தொட்டாற்சுருங்கி என்கிற பெயர் பெற்றது. தொட்டா சிணுங்கி செடியின் இலையை தொட்டவுடன் அது உடனே மூடிக்கொள்ளும், கொஞ்ச நேரம் கழித்து தானாக திறந்து கொள்ளும். அதை பார்ப்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இந்த செயல் தொட்டா சிணுங்கி தாவரத்தின் தனி சிறப்பாகும். இதற்கு காரணம் தான் என்ன?
இச்செயலுக்கு காரணம், இத்தாவரத்தில் இருக்கும் இரண்டு மிக முக்கிய வேதிப்பொருளாகும், அவை
  1. மிமோபுதின் (Mimopudine)
  2. பொட்டாசியம் உப்பு உள்ள க்ளுகோபைரனோசில் ஜென்சேட் (Potassium 5-O-beta-D-glucopyranosylgentlsate)
மிமோபுதின் (Mimopudine) என்ற வேதிப்பொருள் இலையை திறப்பதற்கும், பொட்டாசியம் உப்பு உள்ள க்ளுகோபைரனோசில் ஜென்சேட் (Potassium 5-O-beta-D-glucopyranosylgentlsate) என்ற வேதிப்பொருள் இலையை மூடுவதற்கும் உதவுகிறது.
Mimosa pudica
இதன் இலை, மூலநோய், பவுத்திரப் புண்களைக் குணமாக்கும்; உடலைத் தேற்றும்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாறு புண்களைக் குணமாக்கும்; அதி மூத்திரத்தைக் கட்டுப் படுத்தும்; காமம் பெருகும். வேர் மூலநோய் மற்றும் வாதத் தடிப்பைக் குணமாக்கும்.
மலர்கள் தொகுப்பானவை, மென்மையானவை, இளஞ்சிவப்பு நிறமானவை. கனிகள் தொகுப்பானவை, அலைபோன்ற வளைவு கொண்டவை. தட்டையானவை. விளிம்புகளில் முள் போன்ற சொரசொரப்பான உரோமங்கள் காணப்படும்.கனியில் 5 விதைகள் வரை தட்டையாகக் காணப்படும்.
இந்தியா முழுவதும் சமவெளிகள், கடற்கரையோரங்களில், சிறிய தொகுப்பாக காணப்படுகின்றன. தமிழகத்தில், ஈரப்பாங்கான இடங்கள், ஆற்றங்கரைகள், சாகுபடி நிலங்களின் கரைகள் மற்றும் தரிசு நிலங்களில் வளர்கின்றன.
தூக்கமின்மை நோய்க்கும் இச்செடி நல்ல மருந்தாகும். 5.0 கிராம் அளவு இச்செடியின் இலையை கொதிக்க வைத்து இரவு நேரத்தில் 2 – 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நோய் (Insomnia) குணமாகும்.
ஃபினீயல் சுரப்பி (Pineal Gland) பெருமூளையின் (Cerebrum) அடிப்பாகத்தில் அமைந்துள்ள நாளமில்லா சுரப்பியாகும் (Endocrine gland). இச்சுரப்பி மெலடோனின் (Melatonin) என்ற இயக்குநீரை (Hormone) சுரக்கிறது. இது நம் உடலில் உயிரியல் கடிகாரத்தை (Biological Clock) சீராக வைத்திருக்க உதவுகிறது. அதாவது, மெலடோனினின் வேலையானது ஒரு நாளில் மனிதனை இரவு – பகல் என்று அது அதுக்குரிய வேலையை செய்ய ஞாபகப்படுத்துகிறது (Circadian Rhythm). பொதுவாக தூங்கும் முறையை ஒழுங்கு படுத்துகிறது. இதன் அளவில் ஏதாவது பிரச்சனை என்றால் தூக்கம் வருவதிலும் பிரச்சனை வரும். சித்தர்கள் தங்கள் உடலை பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்வதற்கு இச்சுரபிதான் மிக முக்கிய காரணமாகும். பிரபஞ்ச சக்தியை ஆழ்நிலை தியானம் மற்றும் தவத்தின் மூலம் பெற்று பல வருடங்கள் வாழ்ந்துள்ளார்கள். அப்படியான ஆழ்நிலை தியானத்தின் போது இச்சுரபி “டைமெத்தில் ட்ரிப்டமைன் (N,N-dimethyltryptamine) என்ற வேதிப்பொருளை சுரக்கிறது. பொதுவாக இவ்வேதிப்பொருள்  உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பொருளாகும். ஏனென்றால் இதை உட்கொண்டால் நம் மனநிலையை ஏகாந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

இவ்வேதிப்பொருள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் திசுக்களை புதுப்பிக்கவும் உதவுவதாக விஞ்ஞானிகள் 2014 ஆம் ஆண்டு கண்டுபிடித்துள்ளார்கள். இவ்வேதிப்பொருள் இயற்கையாகவே தொட்டா சிணுங்கி செடியின் வேர் பகுதியில் நிறைந்துள்ளது. ஆகவே முறையாக இச்செடியின் வேர் பகுதியை சாப்பிட்டால் நமக்கு டைமெத்தில் ட்ரிப்டமைன் (N,N-dimethyltryptamine) குறைவில்லாமல் கிடைக்கும். இவ்வேதிப்பொருள் நம் உடலில் சேர்வதற்கு முன்பே சில நொதிப்பொருளின் (Enzyme) மூலம் ஜீரணம் ஆகி வெளியேறிவிடும். ஆகையால் முறையாக சாப்பிட வேண்டும்.

மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் தற்பொழுது உள்ள நுகர்வு கலாசாரத்தில் நாம் உபயோகிக்கும் பல பொருட்கள் இச்சுரபியை அழித்துக் கொண்டு வருகிறது. முக்கியமாக பற்பசையில் உள்ள ஃபுளோரைடு (Fluoride) வேதிப்பொருள் ஒரு காரணியாகும். இச்சுரபியானது ஃபுளோரைடு வேதிப்பொருளை தன்னிடத்தில் உறிஞ்சி கொள்வதனால் இதன் செயல்பாடு குறைந்து கொண்டே வருகிறது.

தொட்டாற்சிணுங்கி, தொட்டால்வாடி, இலச்சி, இலட்சுமி மூலிகை போன்ற மாற்றுப் பெயர்களும் இந்தத் தாவரத்திற்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.

நீரழிவு நோய் கட்டுப்பட தொட்டாற்சுருங்கி முழுத் தாவரத்தை உலர்த்தி தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு காலையில், வெந்நீருடன் 48 நாள்கள் வரை சாப்பிட்டு வரவேண்டும்.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிகமான இரத்தப் போக்கை கட்டுப் படுத்த முழுச் செடியும் இடித்து சாறு எடுக்க வேண்டும். 4 தேக்கரண்டி அளவு சாற்றுடன், இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடிக்க வேண்டும். தினமும் மூன்று வேளைகள் அவ்வப்போது தயார் செய்த சாற்றைப் பருக வேண்டும். அல்லது ஒரு கைப்பிடி அளவு இலைகளுடன், சிறிதளவு சீரகம், வெங்காயத்தைச் சேர்த்து, அரைத்து எலுமிச்சம் பழ அளவு சாப்பிட வேண்டும்.

வெட்டு காயங்கள் குணமாக முழுச் செடியை அரைத்து சாறு எடுக்க வேண்டும். காயத்தின் மீது சாற்றைத் தடவ வேண்டும். குணமாகும் வரை தினமும் இரண்டு வேளைகள் தொடர்ந்து தடவி வர வேண்டும்.

கை,கால் மூட்டு வீக்கம் குணமாக இலையை அரைத்து, பசையாக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

ஒவ்வாமை, தோல் தடிப்புகள் குணமாக தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.⁠⁠⁠⁠

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

15 − 11 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.