Views: 177
- அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்?
- பூவில் பிறக்கும், நாவில் இனிக்கும். அது என்ன?
- ஒற்றைக் காலில் சுற்றுவான், ஓய்ந்து போனால் படுப்பான் அவன் யார்?
- அடிக்கடி தாவுவான் அரசியல்வாதியல்ல அவன் யார்?
- காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?
- சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?
- ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
- நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன?
- சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
- கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.
1.ஐஸ்
2.தேன்
3.பம்பரம்
4.குரங்கு
5.நாவல் பழம்
6.காய்ந்த மிளகாய்
7.விரல்கள்
8.பூனை
9.தீக்குச்சி
10.வெங்காயம்