வி. மே 22nd, 2025

Views: 55

ஏப்ரல் 19 அன்று உலக கல்லீரல் தினம் கடைப் பிடிக்கப்படுகிறது . மக்களிடையே கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி உருவாக்கவும், இந்த அற்புத உறுப்பைக் காப்பாற்றவும் இந்த தினம் கொண்டாடப் படுகிறது. இப்போது மக்களுக்கும் மற்றும்  உடல்பாதுகாப்பு துறையில் இருப்பவர்களுக்கும் கூட  கல்லீரல்மற்றும் அதன்  நோய்கள் பற்றிய தகவலையும், எடுத்துச் செல்லவேண்டியிருக்கிறது, என ஐக்கிய நாட்டு சபை கருதுகிறது. அதற்காகவே, இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது. உடலின் அனைத்து வளர்சிதை மாற்றங்களும் நடைபெறும் மேடை கல்லீரல்தான்.   கல்லீரலும் இதயம், மூளை போல முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.  இது இல்லாவிட்டால் நம்பாடு அம்போ தான்.  இது கருஞ்சிவப்பு நிறத்தில் வயிற்றில் பெரும்பகுதியை அடைத்துக் கொண்டு, கொழுக் மொழுக்கென்று இரு பகுதிகளாக   இருக்கிறது. வலது பகுதி,  இடதை விடப் பெரியது.  கல்லீரலும் மூளையும் எடையில் சமமானவர்கள்.  அதாவது 1400 கிராம்..!

நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்.  இது ஓர் ஆச்சரியமான உறுப்பு என்று கூட கூறலாம். மொத்தமாக கல்லீரல்  சுமாராக 36,000 பணிகளை அனாயசமாக, சும்மா போகிறபோக்கில்  செய்கிறதாம். இது இல்லாமல் நாம வாழவே முடியாதுங்க..! ஆனால் இதன் மீள் வளர்ச்சி என்பதும், நாம் எதிர்பார்க்காத வகையில் அனாயசமானது.  ஆமாப்பா., இதன்  80 %  சேதமடைந்தாலும் கூட, சாதாரணமாக பணி செய்வார் கல்லீரல் . அதுபோலவே, 80 %  வெட்டி வெட்டி எடுத்துவிட்டாலும் கூட, அடுத்த 15 -20 நாட்களில் இவர் துரித கதியில் படுவேகமாக அதன் பழைய அளவுக்கே வளர்ந்து விடுவார். இதன் மீள்திறனும்  , தாக்குப் பிடிக்கும் தன்மையும் மாயாவி போலதான்.  எடுத்து விட்டாலும் கூட, அடுத்த 15 -20 நாட்களில் இவர் துரித கதியில் படுவேகமாக அதன் பழைய அளவுக்கே வளர்ந்துவிடுவார். இதன் மீள்திறனும்  , தாக்குப் பிடிக்கும் தன்மையும் மாயாவி போலதான்.

நம் உடலின் முக்கிய வேதி தொழிற்சாலையும், சுத்திகரிப்பு தொழிசாலையும் இதுதான். நீங்கள் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையற்றதும் , தீங்கு விளைவிப்பவையும் இருந்தால், அவற்றை  உடனடியாக வெளியேற்றுகிற வேலையைச் செய்வது கல்லீரல்தான். அது மட்டுமல்ல நீங்கள் உண்ணும் உணவை, உடலுக்கு வேண்டிய வடிவத்தில் மாற்றிக் கொடுப்பவரும் கல்லீரலார் தான். நம் உடனடி தேவைக்குப் போக, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிளைகோஜனாக சேமித்து வைக்கப் படுவதும் இங்கேதான்.  அவசர தேவையின் சேமிப்புக் களன் கல்லீரலே. உடலில் தேவைக்கேற்ப, தேவையான இடத்தில் தேவையான அளவு, தேவையான நேரத்தில்,  குளுகோஸை அவ்வப்போது   விநியோகம் செய்வதும் இவர்தான்.  கல்லீரல் புரதத்தை உடல் உட்கிரகிக்கும் எளிதான அமினோ அமிலங்களாக மாற்றித் தருகிறது. கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A, D, E & K யின் சேமிப்பு கிடங்கு இதுதான். கல்லீரலில் இரண்டு பெரிய இரத்தக் குழாய்கள் உள்ளன. அதன் உதவியால்தான் இத்தனை பணிகளும் நடக்கின்றன. இந்த உறுப்பில் 96 % நீர்தான் உள்ளது

கல்லீரலில் இரண்டு பெரிய இரத்தக் குழாய்கள் உள்ளன. அதன் உதவியால்தான் இத்தனை பணிகளும் நடக்கின்றன. இந்த உறுப்பில் 96% நீர்தான் உள்ளது. இதன் மீள் திறனும், பணிப் பளுவும் அளப்பரியது. எனவே நல்ல உணவு உண்டு, நிறைய நீர் அருந்தி, நல்ல உடற்பயிற்சி செய்து கல்லீரலை காக்க வேண்டியது மிக மிக அவசியம். கல்லீரல் நன்கு வேலை செய்யவில்லையென்றால், தோலும், கண்ணும், நகமும் மஞ்சளாகிவிடும். மலம் வெள்ளையாக இருக்கும். சில வைரஸ் பாதிப்புகள், சில மருந்துகள், மதுபானம் போன்றவை கல்லீரலை சிர்ரோசிஸ் (cirrhosis) வந்து செயலிழக்கச் செய்துவிடும். மாசு கலந்த காற்று, மன அழுத்தம், உடல் பருமனும் கூட கல்லீரலைப் பாதிக்கும். சர்க்கரை நோய், மன அழுத்தம், உடல் பருமன், மஞ்சள் காமாலை போன்றவை கல்லீரலில் கொழுப்பு உருவாக வழி வகுக்கும். பாதிக்கப்பட்ட கல்லீரலை, கல்லீரல் மாற்று சிகிச்சை மூலம் சரி செய்யலாம். குடும்பத்தினர்/இரத்த உறவினர்தான் கல்லீரல் தரவேண்டும். கல்லீரலும் புற்றுநோய் பாதிப்புக்கு ஆட்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

four × 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.