ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 22

தேவையானவை:
முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம், மொச்சை (ஊற வைத்தது) – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பொடியாக, நறுக்கிய புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கொள்ளு, சோளம், மொச்சை, காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இதற்கு சிறந்த பொருத்தம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

2 × 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.