ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 16

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு  – ( குறள் எண் : 1 )

இனிய புத்தாண்டு (2017) தின நல்வாழ்த்துக்கள்

பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதையடுத்து டில்லி தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் அணு கடிகாரத்தில் கூடுதலாக ஜன.,1 ஒரு விநாடி சேர்க்கப்பட்டது.

அணு கடிகாரம்:
பூமியின் சுழற்சி வேகம் குறைகிறபோது அதை ஈடுகட்ட கடிகாரத்தில் ஒரு வினாடி கூட்டப்படும். தற்போது பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதையடுத்து டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் அணு கடிகாரத்தில், டிச.,31ம் தேதி இரவு 11:59 மணி 59 விநாடிகள் ஆன போது கூடுதலாக ஒரு விநாடி சேர்க்கப்பட்டு புத்தாண்டு பிறந்தது.
‘லீப் செகண்ட்’:
அணுகடிகாரத்தில் செய்யப்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்க, ஜன.,1 காலை 5 மணி 29 நிமிடம் 59 வினாடியின்போது(05:29:59) கூடுதலாக ஒரு வினாடி சேர்க்கப்பட்டது. இந்த ‘லீப் செகண்ட்’ சேர்ப்பு, செயற்கைக்கோள் ஊடுருவல், வானியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

fourteen − 13 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.