ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 25

மூன்று பெரிய விசிறிகள் கொண்ட காற்றாலைகள் மீது உள்ள குறைகளை களைய, புதிய காற்றாலை ஒன்றை, ‘டையர் விண்ட்ஸ்’ என்ற துனீசிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. காற்றாலைகளின் ராட்சத விசிறித் தகடுகள் சுழலும் போது எழும் இரைச்சல், அக்கம் பக்கத்தவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதுண்டு. தவிர, பறவைகள் அடிபட்டு இறப்பதும் உண்டு. இதற்கு மாற்றாக டையர் விண்ட்ஸ் உருவாக்கியுள்ள காற்றாலைக்கு இரண்டே இறக்கைகள் தான் உள்ளன. ஹம்மிங்பேர்டு என்ற குட்டிப் பறவை, மலர்களில் தேன் உறிஞ்சும்போது, அதன் அலகு துளியும் அசையாமல் இருக்கும். ஆனால், அதன் இறக்கைகள் வினாடிக்கு, 80 முறை அடித்துக் கொண்டிருக்கும். இதை கவனித்த டையர் நிறுவன விஞ்ஞானிகள், ஹம்மிங்பேர்டின் இறக்கை அமைப்பை, ‘காப்பி’ அடித்து, தங்கள் காற்றாலையை வடிவமைத்து உள்ளனர்.காற்று வீசும்போது, டையர் காற்றாலையின் இறக்கைகள் இரண்டும், ஹம்மிங்பேர்டு பறவையின் இறக்கை நுனி, ‘8’ வடிவில் அசைய ஆரம்பிக்கும். இந்த அசைவின் விசையில், காற்றாலையின் துாணில் இருக்கும் மின் உற்பத்தி இயந்திரம் இயங்கி, மின்சாரம் உற்பத்தியாகிறது. மூன்று ராட்சத தகடு ஆலைகளை விட, சிறிய இரண்டு இறக்கை ஆலை கூடுதலாக மின் உற்பத்தி செய்வதாகவும் டையர் நிறுவனம் தெரிவிக்கிறது.

*படித்தேன்; பகிர்ந்தேன்* இந்த பதிவை பார்க்கும் அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

3 × three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.