Views: 14
கோடை காலம் வந்துவிட்டால் எந்தமாதிரியான சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்த ஹெல்த்-டிப்ஸ்
கோடை காலத்தில் அதிகளவில் நீர் சத்து தான் தேவைப்படும். நீர் சத்து அதிகளவில் சிட்ரஸ் பழத்தில் நிறைந்துள்ளது. ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை, கிவி, கொய்யா ஆகிய பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கோடை காலத்தில் இது போன்ற பழங்களில் தினந்தோறும் ஜூஸ் குடித்து வர உடலுக்கு தேவையான சக்தியும், நோய் எதிர்ப்பு ஆற்றலும் கிடைக்கும்.
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வர கோடைகாலத்தில் தொண்டையில் வறட்சி வராமல் தடுக்கிறது. உடலுக்கு தேவையான நீர் சத்துக்களை தருகிறது. தினந்தோறும் வெந்தயத் தண்ணீர் குடித்து வர சிறுநீர் கோளாறு நீங்கும். நீர்கடுப்பு பிரச்சனையும் சரியாகும்.
கோடை காலத்தில் முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் கண் எரிச்சல், கண் சூடு போன்ற எந்த பிரச்சனையும் வராது. அதோடு, உடலுக்கு நீர் தேவையான சத்துக்களை அளிக்கிறது.
உடலுக்கு தேவையான பொட்டாசியம், கால்சியம், சோடியம் போன்ற சத்துக்கள் இளநீரில் இருப்பதால் வெயில் காலத்தில் குடிப்பது நல்லது.