Views: 176
நாம் எல்லோருக்கும் நல்ல முகூர்த்தம் பற்றி நன்றாக தெரிந்திருக்கும்.
சூரியன் உதித்தெழுவதற்குநாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின்மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து
நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும்எழச் செய்கின்றது.இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள் புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.
பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள்.
பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது.
ஸ்ரீமத் பாகவதம் 3:20:46 ல் பிரம்மமுகூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது.
ரிக்வேதத்திலும் முகூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முஹூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது. அவையாவன :
1. ருத்ர முஹுர்த்தம் – 06.00A.M – 06.48A.M
2. ஆஹி முஹுர்த்தம் – 06.48A.M –07.36A.M
3. மித்ர முஹுர்த்தம் .. 07.36A.M – 08.24A.M
4. பித்ரு முஹுர்த்தம் .. 08.24am – 09.12am
5. வசு முஹுர்த்தம் .. 09.12am – 10.00am
6. வராஹ முஹுர்த்தம் .. 10.00am – 10.48am
7. விச்வேதேவாமுஹுர்த்தம் .. 10.48am – 11.36am
8. விதி முஹுர்த்தம் .. 11.36am – 12.24pm
9. சுதாமுகீ முஹுர்த்தம் .. 12.24pm – 01.12pm
10.புருஹூத முஹுர்த்தம் .. 01.12pm – 02.00pm
11.வாஹிநீ முஹுர்த்தம் .. 02.00pm – 02.48pm
12.நக்தனகரா முஹுர்த்தம் .. 02.48pm – 03.36pm
13.வருண முஹுர்த்தம் .. 03.36pm – 04.24pm
14.அர்யமன் முஹுர்த்தம் .. 04.24pm – 05.12pm
15.பக முஹுர்த்தம் .. 05.12pm – 06.00pm
16.கிரீச முஹுர்த்தம் .. 06.00pm – 06.48pm
17.அஜபாத முஹுர்த்தம் .. 06.48pm – 07.36pm
18.அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் .. 07.36pm – 08.24pm
19.புஷ்ய முஹுர்த்தம் .. 08.24pm – 09.12pm
20.அச்விநீ முஹுர்த்தம் .. 09.12pm – 10.00pm
21.யம முஹுர்த்தம் .. 10.00pm – 10.48pm
22.அக்னி முஹுர்த்தம் .. 10.48pm – 11.36pm
23.விதாத்ரு முஹுர்த்தம் .. 11.36pm – 12.24am
24.கண்ட முஹுர்த்தம் .. 12.24am – 01.12am
25.அதிதி முஹுர்த்தம் .. 01.12am – 02.00am
26.ஜீவ/அம்ருத முஹுர்த்தம் .. 02.00am – 02.48am
27.விஷ்ணு முஹுர்த்தம் .. 02.48am – 03.36am
28.த்யுமத்கத்யுதி முஹுர்த்தம் .. 03.36am – 04.24am
29.பிரம்ம முஹுர்த்தம் .. 04.24am – 05.12am
30.சமுத்ரம் முஹுர்த்தம் .. 05.12am – 06.00am
மேலே சொல்லியுள்ளவற்றில் 29வதாகச் சொல்லப்பட்டிருப்பதுதான் பிரம்மமுகூர்த்தமாகும்.
இவற்றுள் 26வது முஹூர்த்தமான ஜீவ/அம்ருத முஹூர்த்தம் மற்றும் 29வது முஹூர்த்தமான ப்ரம்ம முஹூர்த்தம் ஆகியவை இறைவழிபாடு மற்றும் திருமண வைபவங்களுக்கு மிகவும் சிறப்பான முஹூர்த்தங்களாகும்.
இந்த பதிவை பார்க்கும் அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் அது எனக்கு மேலும் எழுத தூண்டுகோலாக அமையும். *படித்தேன்; பகிர்ந்தேன்*