Views: 118
விடுகதை எனப்படுவது நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றாகும். விடுகதைகள் ‘மக்களின் அறிவுத்திறனின் வெளிப்பாடு’ என அறிஞர்கள் வருணிக்கின்றனர். தாம் காணும் பொருட்களையும் செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் மறைபொருளாக உருவாக்கப்படும் இலக்கிய வடிவமே விடுகதை. விடுகதைகள் கற்பனை வளத்துடன் கவிதையாகவும் கதையாகவும் உரைநடையாகவும் வழங்கி வருகின்றன. அவை தனிப்பட்ட ஒருவராலும் உருவாக்கப்பட்டவை அல்ல. காலங்காலமாக வாய்வழி வாய்வழி சொல்லக் கேட்டு செவிவழி செவிவழி பரவி வந்தவையாகும். காலத்திற்கு ஏற்ப அவை பரிணாம வளர்ச்சி கண்டு வருகின்றன. அவை நமது சிந்தனைக்கு விருந்தாக அமைந்து அறிவு வளர்ச்சிக்கு வழிகோலுகின்றன. சிறுவர் முதல் முதியோர்வரை அனைவரும் விடுகதைகள் சொல்வதிலும் அவற்றை விடுவிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் – அது என்ன?
பட்டனைத் தட்டினால் சட்டென விரியும் – அது என்ன?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
இணையத்தில் இருந்து சேகரித்துத் தொகுத்தவை.