வி. மே 22nd, 2025

Views: 64

வணக்கம்

இன்று ஸ்ரீ விளம்பி வருடம் ஆவணி மாதம் 13ம் நாள் புதன்கிழமை.

திருக்குறள்:

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

ஆன்மீக தகவல்:

ராமாயணத்தை இந்தியில் “ராமசரிதமானஸ்’ துளசிதாசர் எழுதியுள்ளார். அதில் பாலகாண்டத்தில் வரும்,

“பந்தௌ நாம ராம் ரகுபர் கோ!
ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!!
பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ!
அகுண அனூபம் குண நிதான் ஸோ!! “
என்ற ஸ்லோகம் இந்த தடங்கலை சீர்செய்யும்.
இதைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லலாம்.

“”ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாமே அந்நாமத்தில் அடங்கி உள்ளன. ராமநாமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன. வேதத்தின் உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராமநாமத்தை போற்றுகின்றேன்”

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல எவ்வித விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரம் காலமும் இல்லை. தினம் 3 முறை தொடர்ந்து ஜெபித்து வருவோருக்கு முன்வினைப் பாவம் நீங்கி அனுகூலம் உண்டாகும்.

உலகப்பார்வை

கூகிள் (Google) தனது கூகிள் தேஸ்(Google Tez ) தற்போது Google Pay என்று மாற்றியிருக்கிறது. கூகுள் UPI பரிவர்த்தனை மூலம், சிறு கடன் வழங்குவது, நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது என்று புதிய சேவைகளை விரிவுபடுத்தப்போகிறது.

சமூக வலைதளங்களின் முக்கிய அம்சங்களுள் ஒன்றானவாட்ஸ் அப் நிறுவனம், அடிக்கடி தனது புதிய அப்டேட்களை வெளியிட்டுப் பயனர்களைக் கவர்ந்து வருகிறது. பயனர்களுக்கு வாட்ஸ் அப் விடுத்த எச்சரிக்கை!வாட்ஸ் செயலியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் பாதுகாப்பு குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்குப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தற்போது வாட்ஸ் அப்அதில் உள்ள சிக்கலையும் வெளியிட்டுள்ளது.இந்தச் சேவை குறித்து தற்போது வாட்ஸ் அப் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்படும் வாட்ஸ் அப்பின் மீடியா மற்றும் மெசேஜ்கள், இனி end-to-end encryption செய்யப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளது. அதாவது கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்படும் எந்தவொரு பதிவுக்கும் இனி பாதுகாப்பு இல்லை என்பதே இதன் பொருளாகும். வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பயனர்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பயனுள்ள குறிப்புக்கள்

செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிப்பதற்கு நீங்கள் செய்யவேண்டியவை:

1. செல்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், Brightness-ஐ அதிகமாக வைத்து பயன்படுத்துவர். அவ்வாறு பயன்படுத்துவது செல்போனின் charge-ஐ சீக்கிரம் குறைவாக்கிவிடும். வெளியில் செல்போனை பயன்படுத்துவதாக இருந்தால் Auto Brightness Mode-ல் வைத்து விடுவது நல்லது.

2. நாம் வைத்திருக்கும் பெரும்பாலான செயலி, நாம் பயன்படுத்தாவிட்டாலும் இயங்கிக்கொண்டே இருக்கும். ஆதலால், தேவையற்ற செயலிகளை uninstall செய்து விடுவது நல்லது.

3. ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்றவற்றை எப்பொழுதும் on-ல் வைத்திருக்காமல், தேவையான பொழுது மட்டும் on செய்யவும். இது, பேட்டரி குறைவான நேரத்தில் தீராமல் இருக்க உதவும்.

4. செல்போனில், notification வரும்பொழுது, screen wake ஆகும்படி வைத்திருந்தால், அதனை மாற்றவும்

5. ஒவ்வொரு முறை செல்போன் சார்ஜ் செய்யும்போது reboot செய்யவும்.

படித்தேன்! பகிர்ந்தேன்! நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

fifteen − 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.