வெள்ளி. மே 23rd, 2025

Views: 60

அன்பர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.

“போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்”
−ஔவை

“இப்பிறவியில் அடுத்தவரைக் குறைகூறி இன்பம் காண்பவன்,மறுபிறவியில் மீளமுடியாத வறுமையில் வாழ்வான்”

உடல்நல குறிப்பு

ஆப்பிள் மூலம் உடலை சுத்தபடுத்துவது பற்றி : ஒவ்வொருவரும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்கு மாதம் ஒருமுறையாவது உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் தற்போது ஜங்க் உணவுகளை உட்கொள்வதால், உடலின் மூலை முடுக்குகளில் டாக்ஸின்கள் தேங்கி, உடலின் ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாட்டையும் பாதிக்கும். குறிப்பாக செரிமான மண்டலத்தைப் பாதித்து, பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
ஆகவே இப்பிரச்சனைகளைத் தடுக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிள் டயட்டை மாதத்திற்கு ஒருமுறை பின்பற்றினால், உடல் முழுமையாக சுத்தமாகி, உடலியக்கம் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். காலை முதல் இரவு முழுவதும் அளவாக ஆப்பிள் மட்டும் உணவாக உட்கொள்ள வேண்டும்.

இன்றைய செய்தி

பாலின விகிதம் நாட்டில் சீரற்ற விகிதத்தில் உள்ளது. மேலும் 17 மாநிலங்களில் சத்திஸ்கர்,கர்நாடகா,இமாச்சலப்பிரதேசம்,அசாம்,மகாராஷ்டிரா,ராஜஸ்தான்,குஜராத்,உத்திரகாண்ட் மற்றும் அரியானா 1000 ஆண்களுக்கு 950க்கும் குறைவாகவே உள்ளது என நிதி ஆயோக் ஆய்வறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

8 + seventeen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.