ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 22

மகாசிவராத்திரி அன்று தூய்மையான மனதோடு, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு, மனதார ஒரு முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்தாலே போதும். உங்களுடைய பிறவிப் பலனை நீங்கள் பெறலாம் என்ற ஒரு நல்ல தகவலுடன் இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

ஆனால் எல்லோருடைய உடல்நிலையும் இதற்கு ஒத்துழைக்காது. அவரவர் உடல்நிலையைப் பொறுத்து உங்களுடைய விரதத்தை மேற்கொள்ளலாம். அதன்மூலம் எந்த தெய்வ குற்றமும் ஏற்படாது. சிவராத்திரி என்றாலே தூங்காமல் கண் விழிக்க வேண்டும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். முறைப்படி தூங்காமல் எப்படி கண் விழிப்பது. மார்ச் மாதம் 1-ஆம் தேதி காலை விரதத்தை தொடங்கி விட்டீர்களா? நீங்கள் தூங்கவே கூடாது. மார்ச் மாதம் 2 ம் தேதி மாலை 6 மணிக்கு சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு அதன் பின்புதான் உங்களுடைய தூக்கத்தை தொடர வேண்டும். இதுவே கண் விழிக்கும் சரியான முறை. (இரவு கண் விழிக்கும்போது சிவபெருமானை நினைத்து சிவபுராணம், தேவாரம், திருவாசகம், இப்படிப்பட்ட புத்தகங்களை படிக்கலாம். இந்த பாடல்களை ஒலிக்கவிட்டு காதால் கேட்கலாம். சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை அறவே தவிர்ப்பது நல்லது.)

பூஜை செய்யும் முறை:
சிவலிங்கம் வீட்டில் வைத்திருப்பவர்கள் சிவராத்திரி அன்று இரவு, கட்டாயம் சிவனுக்கு ஒரு கால பூஜையாவது செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து கட்டாயம் பூஜை செய்தே ஆக வேண்டும். சிவராத்திரி நான்கு கால பூஜை நேரம் என்பது இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இந்த வருடம் மார்ச் 1ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு பிறகு, உங்கள் வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து உங்களால் முடிந்த நிவேதனத்தை வைத்து பூஜை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

முதல் கால பூஜை தொடங்கும் நேரம் இரவே 7:30 மணி, இரண்டாம் கால பூஜை தொடங்கும் நேரம் இரவு 10.30, மூன்றாம் கால பூஜை தொடங்கும் நேரம் இரவு 12.00 மணி, நான்காம் கால பூஜை தொடங்கும் நேரம் அதிகாலை 4.30 மணி. முதல் கால பூஜையை இரவு 7.30 மணியிலிருந்து 10.30 மணிக்கு முன்பாக எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். இதேபோல்தான் அடுத்தடுத்து வரும் நேரத்தையும் நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த நான்கு காலத்தில் குறிப்பாக இரவு 11.30 மணியிலிருந்து 1.00 மணி வரை சிவபெருமானை வழிபாடு செய்வது மிகமிக சிறப்பான காலமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நேரத்தில்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமானை வழிபட கூடிய நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடிந்தால் சிவராத்திரியன்று இரவு இந்த நேரத்தை மட்டும் தவறவிடாதீர்கள். இதைதான் ‘லிங்கோத்பவ காலம்’ என்று சொல்வார்கள்.

வீட்டில் லிங்கம் இல்லாதவர்கள் சிவபெருமானின் திருவுருவப் படம், அண்ணாமலை ஈஸ்வரின் படம் வைத்திருப்பவர்கள், இரவு உங்கள் பூஜை அறையில், அந்த திருவுருவ படத்திற்கு முன்பாக அமர்ந்து அந்த திருவுருவப்படத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, உங்களுக்குத் தெரிந்த தேவாரம் திருவாசகம் சிவபெருமானின் மந்திரங்கள் இவற்றை உச்சரித்தோ அல்லது காதால் கேட்டோம் இரவு முழுவதும் கண் விழிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். இது அல்லாமல் கோவிலுக்கு சென்று சிவபெருமானின் அபிஷேகத்தை பார்த்து கண் விழித்தும் இரவு பொழுதை கழிக்கலாம்.

சிவராத்திரி விரத வகைகள்

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

நித்திய சிவராத்திரி

மாத சிவராத்திரி

பட்ச சிவராத்திரி

யோக சிவராத்திரி

மகா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

three + six =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.