Views: 31
மனிதராகப் பிறந்த அனைவரும் தங்களுடைய முன்னோருக்கு நன்றி தெரிவிப்பது அவசியம். வாழும் காலத்தில் பெற்றோரை பணிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்கள் செய்த உதவிக்கு ஈடாக நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணரவும் வேண்டும்.
சாஸ்திரம் விதித்த சட்டப்படி கொடுக்கும் தர்ப்பணத்தை முன்னோரிடம் சேர்ப்பது பிதுர்தேவதைகளின் பொறுப்பு. சிராத்தம் என்பதற்கே 'சிரத்தையோடு செய்வது' என்பது பொருள். முன்னோர் மீது நன்றியுணர்வும், சாஸ்திரத்தின் மீது அக்கறையும் கொண்டு தர்ப்பணம் செய்தால் அவர்களின் நல்லாசியால் நம் வாழ்வு செழிக்கும். தைஅமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவது, அவர்களின் நல்லாசியால் நம் வாழ்வு செழிக்கும்.