Views: 32
வணக்கம். நண்பர்களே!!
இன்று பங்குனி உத்திரம். நமது சைவ சமயத்தில் மிக முக்கியமான நாளாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் மாதங்களில் 12-வது மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம். இவை இரண்டும் இணையும் திருநாளே பங்குனி உத்திரம்.
மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.
சந்திரன், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம் பங்குனி உத்திரமாகும்.
திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் தெய்வானையை மணந்ததும் பங்குனி உத்திர நாளில்தான்.
திருச்சிற்றம்பலம்