Views: 30
வணக்கம். இன்று சனி பிரதோசம். ஐப்பசி மாதம் வந்திருக்கும் இந்த பிரதோசத்தின் சிறப்பு திபாவளி மற்றும் கந்தசஷ்டி முடிந்தபின் வந்துள்ளது. உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும். “நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்குபுந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே.”
(என்ற பாடல் பிரதோஷ மகிமையை வலியுறுத்தும்)