Views: 53
வணக்கம்!
இன்றைய தத்துவம்:
” யாரையும் இழந்து விடாதீர்கள்,
இழப்பது எளிது.. பெறுவது கடினம்..
அது பொருளாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி …”
ஞானிகள் சொன்ன குறிப்பு
நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் செயல்கள்,படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் .இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி செடிகளுக்கு விட்டு விட வேண்டும். அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின்ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.
தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்…
• சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்
• வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
• ஆனி – தேன்
• ஆடி – வெண்ணெய்
• ஆவணி – தயிர்
• புரட்டாசி – சர்க்கரை
• ஐப்பசி – உணவு, ஆடை
• கார்த்திகை – பால், விளக்கு
• மார்கழி – பொங்கல்
• தை – தயிர்
• மாசி – நெய்
• பங்குனி – தேங்காய்.
செல்வம் மூன்று வகைகளில் வரும் அவை லட்சுமி செல்வம்,குபேர செல்வம்,இந்திர செல்வம் எனப்படும்.