Views: 33
சாணக்கியரின் முக்கியமான வாழ்க்கை தத்துவங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை இதோ உங்களுக்காக சில
ஒரு வேலையை தொடங்கும் முன் நீங்கள் உங்களுக்குள்ளேயே மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். நான் ஏன் இதை செய்கிறேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? மற்றும் இதில் நான் வெற்றி பெறுவேனா?. இந்த மூன்று கேள்விகளுக்கும் உங்களுக்கு திருப்திகரமான பதில் கிடைத்தால் மட்டும் அந்த காரியத்தை தொடர்ந்து செய்யுங்கள்.
உங்கள் தகுதிக்கு மேலேயோ அல்லது கீழேயோ இருக்கும் எவரிடமும் ஒருபோதும் நட்பை வளர்த்து கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களால் உங்களுக்கு எப்பொழுதும் மகிழ்ச்சி கிடைக்காது.
ஒரு வேலையை தொடங்கிய பிறகு அது தோல்வியில் முடிந்துவிடும் என்று நினைத்து ஒருபோதும் பின்வாங்கி விடாதீர்கள். ஏனெனில் உண்மையாக உழைப்பவர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் ஆவர்.