Views: 71
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரிப்பதாகும்.
முதலாம் படி
கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொம்மைகள் வைக்க வேண்டும்.
இரண்டாம் படி
ஈரறிவு உயிரினங்கள் நத்தை,சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
மூன்றாம் படி
மூன்றறிவு படைத்த கறையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
நான்காம் படி
நான்கு அறிவு உள்ள நண்டு,வண்டு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஐந்தாம் படி
ஐந்தறிவுள்ள மிருகங்கள், பறவைகள் பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஆறாம் படி
ஆறாம் அறிவான சிரிப்பு மற்றும் சிந்திக்கும் சக்தி படைத்த மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஏழாம் படி
மனித நிலையின் உயர் நிலைகள் அடைந்த சித்தர்கள்,ரிஷிகள் பொம்மைகள் வைக்க வேண்டும்.
எட்டாம் படி
தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஒன்பதாம் படி
பிரம்மா, விஷ் ணு,சிவன் போன்ற தெய்வங்கள் பொம்மைகள் வைக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்! நலமுடன்!