Views: 205
வணக்கம்! இன்று விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நமது இந்து சமயத்தில் முழு முதல் கடவுளாக கருதப்படுகிறது. விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். விநாயக சதுர்த்தி அன்று பயன்படுத்தும் இலைகள் (பத்திரங்கள்) மட்டுமே 21 இருக்கின்றன.
பிள்ளையார் சதுர்த்தி அன்று 21 இலைகளைப் போட்டு பூஜை செய்வது விசேஷம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த 21 இலைகளையும் நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர்:–
இதோ 21 இலைகள் (பத்ரம்):
மாசீ பத்ரம், ப்ருஹதி பத்ரம், வில்வ பத்ரம், தூர்வாயுக்ம (அருகம்புல்) பத்ரம், துத்தூர பத்ரம், பதரீ பத்ரம், அபாமார்க பத்ரம், துளசி பத்ரம் சூத (மாவிலை) பத்ரம், கரவீர பத்ரம், விஷ்ணுகிராந்தி பத்ரம், தாடிமீ (மாதுளை) பத்ரம், தேவதாரு பத்ரம், மருவ பத்ரம், சிந்துவார பத்ரம், ஜாஜீ பத்ரம், கண்டகீ பத்ரம், சமீ (வன்னி) பத்ரம், அஸ்வபத்ரம், அர்ஜுன பத்ரம், அர்க (எருக்கு) பத்ரம்.
விநாயகர் மந்திரங்கள்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்குஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன்.கஜாநநம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமா ஸூதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேச்வர பாத பங்கஜம்.சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர் புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே
விநாயகருக்கு செய்யும் பலன் தரும் அபிஷேகங்கள்
நல்லெண்ணெய் அபிஷேகம்: மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.
தண்ணீர் அபிஷேகம்: மனசாந்தி ஏற்படும்.
பஞ்சாமிர்த அபிஷேகம்: அனைத்து செல்வங்களும், தீர்காயுளும் கிடைக்கும்.
பால் அபிஷேகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆயுள் விருத்தியும் கிடைக்கும். தோஷங்கள் நீங்கும்.
மஞ்சள் பொடி அபிஷேகம்: அனைவரும் நமக்கு உதவ முன்வருவார்கள்.ராஜவசியம் உண்டாகும்.
தயிர் அபிஷேகம்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.
இளநீர் அபிஷேகம்: கஷ்டங்கள் நீங்கும். மன அமைதி, புத்தி தெளிவு பெறும்.
கரும்புச்சாறு அபிஷேகம்: வியாதிகள் நீங்கும், கல்வியிலும், சாஸ்திரங்களிலும் ஆர்வமும், திறமையும் உண்டாகும்.
அரிசி மாவுப்பொடி அபிஷேகம்: லட்சுமி வாசம் உண்டாகும். தாராளமாக பணம் புரளும். கடன் தீரும்.
சந்தன அபிஷேகம்: உடல் குளிர்ச்சி பெறும். மனத்திற்கு அமைதி கிடைக்கும். செல்வங்கள் பெருகும்.
சொர்ண அபிஷேகம்: நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். நினைத்த நல்ல காரியங்கள் அனைத்தும் இனிதாக நடக்கும்.
இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தால்: கௌரவம் காக்கப்படும்.
எலுமிச்சை பழம் அணிவித்தால்: ஜாதகத்தில் இருக்கும் போக்கும், துர்க்கையின் அருளாசி கிடைக்கும். எம பயம் நீங்கும்.
மலர்களால் அர்ச்சனை செய்தால்: இல்லத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொருங்கும். வசந்தமான வாழ்க்கை அமையும்.
திருநீற்று அபிஷேகம்: மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் பலிதமாகும்.
கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்: மிருக சீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத் திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.
அன்ன அபிஷேகம்: பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.
விநாகயர் சதுர்த்தியில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்க