வி. மே 22nd, 2025

Views: 73

வணக்கம்!

இன்று ஸ்ரீ விளம்பி வருடம் ஆவணி 14ம் நாள் மகாசங்கடஹர சதுர்த்தி.

திருக்குறள்:

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. – குறள் 409.

சமையல் குறிப்பு

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

ஆன்மீகம்

பிள்ளையார் வழிபாடு, நாம் நமது வீட்டில் சுலபமாக வழிபடும் முறைகள் மற்றும் சிறப்பு.

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்.

வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.

சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

கல் விநாயகர்- வெற்றி தருவார்

ஆன்மீக விசயங்கள் தெரிந்துகொள்வோம்:

நாம் நமது குடியிருப்பு பக்கத்தில் உள்ள கோவில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கும். நம்முடைய இளைய தலைமுறைக்கு இதை தெரியப்படுத்துவோமாக.

ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து’ சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.

அஷ்டபந்தனம் என்றால் என்ன?

‘கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தி’ல் என்னென்ன சேர்ப்பார்கள்?

அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.

‘கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி
செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு – தம்பழுது
நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து
ஆக்கல் அட்டபந்தனம் ஆம்’

தெரியுமா

75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும்.

150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.

2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப் படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்.

400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும். 100 வாட்ஸ்டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.

500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும், 300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.

எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.

வாழ்க வளமுடன் நலமுடன்! படித்ததில் பிடித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

4 + 8 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.