Views: 71
வணக்கம்! இன்று ஆவணி 4ம் நாள் ஸ்ரீவிளம்பி வருடம் திங்கக்கிழமை.
திருக்குறள்:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இன்று:
சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் சூரிய சக்தியை திரவ வடிவில் மற்றும் ரசாயன கலவையாக சேமிக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார். இந்த தொழில்நுட்பத்தை ‘மாலிகுலர் சோலார் தெர்மல்‘ (MOST) என்று அழைக்கிறார்கள்.
இஸ்பெயின் நாட்டு அறிவியல் ஆய்வாளர்கள் புதிய உலோகத்தினை கண்டுபிடித்திருக்கிறார்கள். உலகில் உள்ள மிக உறுதியான உலோகம் என்று உரிமை கோரியுள்ளனர். இது தங்கம் 10 சதவீதமும் 90 சதவீதம் பிளாட்டினமும் கலந்த உலோக கலவை. இது இரும்பை விட 100 மடங்கு உறுதியாக இருப்பதாக கூறுகின்றார்கள்.
சமையல் பொருள் ஒன்று பற்றி
கருவேப்பிலையில் அடங்கியுள்ளன. சத்துக்கள் நீர்ச்சத்து – 0.66 % புரதம் – 6.1 % கொழுப்பு – 0.1 % மாவுச்சத்து – 0.16 % நார்ப்பொருள் – 6.4 % தாது உப்புக்கள் 4.2 % 100 கிராம் இலையில் கால்சியம் – 810 மிலி கிராம் பாஸ்பரஸ் – 600 மிலி கிராம் இரும்புச்சத்து – 3.1 மிலி கிராம் நிகோடினிக் அமிலம் – 2.3 மிலி கிராம், மேலும் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.