ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 88

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

சப்த கன்னியர் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிராம்ஹி: மேற்கு திசைக்கு அதிபதி. சரஸ்வதி அம்சமாக பார்க்கபடுகிறாள். மாணவர்கள் காயத்ரி மந்திரத்தை 108 பிரணாயமம் செய்யவேண்டும்

“ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே

தேவர்ணாயை தீமஹி

தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்”

மகேஸ்வரி: வடகிழக்கு திசைக்கு அதிபதி. கோபம் குறைந்து சாந்தம் அடைய 108 முறை பிரணாயமம் செய்ய வேண்டும்.

“ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்”

வைஷ்ணவி: செல்வ வளம் பெற வழிபட காயத்ரி மந்திரம்

“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்”

சாமுண்டி: யானையின் தோலை ஆடையாக அணிந்தவள். சப்த கன்னியர்களில் முதலில் தோன்றியவள்.

“ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே

சூலஹஸ்தாயை தீமஹி

தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்”

வராஹி: வராஹ முக அமைப்பில் இருப்பவள். துன்பம் விலக 108 முறை

“ஓம் சயாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வராஹி ப்ரசோதயாத்”

இந்திராணி: உயிர் காப்பதிலும் திருமண வரம் தருபவள்.

“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்”

கவுமாரி: அஷ்ட திக்குகளுக்கும் அதிபதி. குழந்தை பாக்கியம் கிட்ட 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

“ஓம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ கெளமாரி ப்ரசோதயாத”

பொன்மொழி: நல்லவனை இகழ்கின்ற தீயவன், வானத்தை நோக்கித் துப்புவனைப் போன்றவன்.-புத்தர்.

நன்றி : தினத்தந்தி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

10 − eight =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.