Views: 107
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). சுவாமி விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் எனும் இரு இளைய சகோதரர்களும், மூத்த, இளைய சகோதரிகளும் இருந்தனர். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. இராமகிருஷ்ணர் இறந்த பின் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார்.
தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.
சுவாமி விவேகானந்தர் சிறுவயதிலேயே இந்துசமய கொள்கைகளில் அதீத ஈடுபாடும், பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதியாகவும், தத்துவமும் புலமையும், சேவை மனப்பான்மைமிக்கவராக காணப்பட்டார். 1984-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இத்தினத்தை “தேசிய வாலிபர் தினமாக” அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இத்தினத்தை அனுசரிக்கப்படுகிறது.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
விவேகானந்தரின் பொன்மொழிகள்
“உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.”
“செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.”
“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!”“நிகழ்காலமானது, நமது கடந்தகால செயல்பாடுகளின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலமானது, நிகழ்கால செயல்பாடுகளின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது.”
“எழு! விழித்தெழு! இலக்கை அடையும்வரை ஓயாதே.”
“ஒரு திட்டத்தை கையிலெடு. அந்த ஒரு திட்டத்தையே உனது வாழ்க்கையாக்கு.”
“நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு”
“உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.”