திங்கள். ஜூலை 28th, 2025

Views: 123

மக்களாட்சி அல்லது சனநாயகம் என்பது “மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்” என வரைவிலக்கணம் கொண்டது. தற்போது உலகில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே கைகொள்ளப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் சார்பாளர்களைத் (சார்பாளிகளைத், பிரதிநிதிளைத்) தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற சார்பாளிகளுடன் சேர்ந்து கூட்டணியாகவோ ஆட்சி செய்வர்.

மக்களாட்சியின் பண்புகள்

ஜனநாயகத்தில் சட்ட சமத்துவம், அரசியல் சுதந்திரம் மற்றும் சட்ட விதிமுறை ஆகியவை முக்கிய அம்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.. இந்த நியமங்கள் எல்லா தகுதியுள்ள குடிமக்களுக்கும் சட்டத்திற்கு முன் சமமாக இருப்பதுடன், சட்டப்பூர்வ செயல்முறைகளுக்கு சமமான அணுகலைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்குக்கும் சமமான எடை உள்ளது தகுதிவாய்ந்த குடிமக்களின் சுதந்திரம் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியன பொதுவாக ஒரு அரசியலமைப்பின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன..

மக்களாட்சியின் கோட்பாடுகள்

ஜனநாயகத்திற்கு மூன்று அடிப்படைக் கோட்பாடுகள் தேவைப்படுகிறது:
1)உயர்ந்த கட்டுப்பாடு, அதாவது அதிகாரத்தின் மிகக் குறைந்த அளவிலான இறையாண்மை.
2)அரசியல் சமத்துவம்,
3)தனிநபர்களும் நிறுவனங்களும் உயர்மட்ட கட்டுப்பாட்டின் முதல் இரண்டு கொள்கைகள் மற்றும் அரசியல் சமத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல்களை மட்டும் கருத்தில் கொள்ளும் சமூக நெறிகள்

மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பர். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு மக்கள் என்றும் கிராட்டோஸ் என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள்.

“மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்” என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ குறிப்பிடுகிறார். அரிஸ்டாட்டில் மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி என்றும் கூறுகிறார். “மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என்று முன்னாள் அமெரிக்க குடியரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூறுகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

12 − 9 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.