வெள்ளி. மே 23rd, 2025

Views: 268

தேங்காய் லட்டு

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – 2 கப்
பால் – 2 கப்
சீனி – 1 கப்
ஏலக்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
பதாம் பருப்பு – 10
பட்டர் – 2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்ததும் அதில் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி 10 – 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் சீனி சேர்த்து , சீனி கரையும்வரை கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். மிதமான சூட்டில் இருக்கும் போது கையில் பட்டரை தடவி லடடுகளாக பிடித்து அதன்மீது பதாம் பருப்பை வைக்கவும். சுவையான தேங்காய் லட்டு ரெடி

கோதுமை பணியாரம்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 250g
தேங்காய்த்துருவல் – 1/2 கப்
சீனி – 150g
ரொட்டி – சிறியது
உப்பு , எண்ணெய் ,நீர் – தேவையான அளவு

செய்முறை
கோதுமைமாவை அரித்து உப்பு , சீனி , ரொட்டி , தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். அக்கலவையில் நீர் சேர்த்து நன்றாக பிசையவும் . நீர்ப்பிடிப்பாக நன்றாக கலவையை கலக்கவும் . 4 மணிநேரத்தின் பின்னர் எண்ணெய்யை கொதிக்க வைத்து மாக்கலவையை சிறிய அளவிலான உருண்டைகளாக கிள்ளி படவும். சூடான கொதுமைப்பணியாரம் தயார்

தட்டை

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 2 கப்
உளுத்தம் பருப்பு மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – தேவையான அளவு
கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் தட்டி, பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான தட்டை தயார்!!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

13 − three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.