வி. மே 22nd, 2025

Views: 152

குத்து விளக்கை துலக்கி சுத்தப்படுத்தும் பணியினை செய்ய குறிப்பிட்ட நாட்கள் உண்டு. ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டும் தான் குத்து விளக்கை தேய்க்க வேண்டும். திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும், குக குரு தன தாட்சணியும் குத்து விளக்கில் பூரணமாய் குடியிருப்பதாய் கூறப்படுகின்றது.

எனவே இந்த நாட்களில் விளக்கினை தேய்த்து கழுவினால் இந்த சக்திகள் விலகிப் போகுமென்பது நம்பிக்கை. வெள்ளியன்று கழுவுவதால் அதில் குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப்போய்விடும் என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை. ஞாயிறன்று விளக்கை துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும்.

மனம் நிலைப்பட திங்கள் அன்று துலக்கி தீபம் ஏற்ற வேண்டும். குரு பார்வை இருந்தால் கடினமான வேலைகளையும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் எளிதாக செய்ய முடியுமே. வியாழன் அன்று தீபமேற்றினால் குருவின் பார்வையும் அது தரும் கோடி நன்மையும் நமக்கே கிடைக்கும். வாகன விபத்துக்களை தவிர்க்க உதவும்.

சனியன்று விளக்கு துலக்கி நாம் போடும் தீபம். மற்ற நாட்களில் விளக்கு துலக்காமல் தீபம் போடலாம். விளக்கு துலக்காத நாட்களில் விசேஷமான நாட்கள் வந்தால் விளக்கை நீரில் கழுவி துடைத்து விபூதி கொண்டு தேய்த்து சுத்தமான துணியினால் விளக்கை துடைத்து தீபம் ஏற்றலாம். பஞ்சமி திதியன்று விளக்கேற்றுவது அகால மரணத்தை தவிர்க்கும்.

புதிதாக நெய்த பருத்தி ஆடையில் அரைத்த சந்தனம், பன்னீர் சேர்த்து தடவி காய வைத்து, அதை திரியாக்கி வடக்கு முகமாக வைத்து, பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும். பல காலம் வராமலிருந்த பணம் தேடி வரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

twenty − fifteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.