Views: 70
விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன.
விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க, கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க, ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற வைராக்கியம்..
அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.
நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர் வகுத்தனர்.
நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.
விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம்.
உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பதாக விளக்கினேன் அல்லவா? பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.
கண் – நெருப்பு
வாய் – நீர்
காது – ஆகாயம்
மூக்கு – மண்
தொடு உணர்வு – காற்று
உண்ணாவிரதம் இருப்பதற்கான நிபந்தனைகள் என்னென்ன? விளக்குகிறார் வயது மற்றும் வாழ்க்கை மேலாண்மை சிறப்பு மருத்துவர் கௌசல்யா நாதன்.‘‘விரதம் (Fasting) என்பதை பண்டைய காலத்தில் நமது முன்னோர் ‘உபவாசம் இருப்பது’ என்றுதான் சொல்லியுள்ளார்கள். உபவாசம் செய்வதன் நோக்கம் உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்துவது.
மாதம் ஒரு முறை உபவாசம் இருப்பதால் நம் வாழ்க்கை முறையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிலர் உபவாசம் இருப்பதை எதுவும்உண்ணாமல் இருப்பது என்று நினைக்கிறார்கள். அது தவறு. காலை முதல் மாலை வரை எதுவும் சாப்பிடாமல் இருந்தால் கோபம் வரும். எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். எரிச்சல் படுவார்கள்.
எதிர்மறை எண்ணங்கள் (Negative thoughts) ஏற்படும். உபவாசத்தின் முக்கிய நோக்கமே தன்னைத்தானே அகத்தாய்வு (introspection) செய்து கொள்ளவும் நேர்மறை எண்ணங்களை (Positive thoughts) வளர்த்துக் கொள்ளவும் மனதைப் புதுப்பிக்கவும்தான்.
செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, சினிமா பார்ப்பது, செல்போன்பேசுவது போன்ற அன்றாட நடவடிக்கைகளை மாதத்தின் ஒருநாள் முற்றிலும் தவிர்த்து விட்டு, மனதுக்கும் உடலுக்கும் ஓய்வளிக்க வேண்டும். பட்டினி கூடாது. பழச்சாறு, மோர், பானகம், எலுமிச்சைச்சாறு, இளநீர் போன்ற நீர்ச்சத்து பானங்களை போதுமான இடைவேளைகளில் அருந்தலாம்.
வேக வைத்த காய்கறிகள், முளை கட்டிய தானியங்கள், சோயா பீன்ஸ், சுண்டல், நவதானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் தானியக் கஞ்சி அல்லது ஓட்ஸ் கஞ்சி குடிக்கலாம். இது உடலுக்கு சக்தி இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். உணவு, பசி, மனம் மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
எந்த வகையான உணவுகள் உண்ணுகிறோமோ அதற்கேற்ற எண்ணங்களே வரும். வயிறு காலியாக இருக்கும் போதுதான் பொறாமை, கோபம், அகத்தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் முகப்பொலிவையும் பாதிக்கும். முறையான விரதத்தினால் போதுமான நீர்சத்துகள் உடலில் தங்கும். ஜீரண உறுப்பு மண்டலம் நலமுடன் இருக்கும்.
உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். வாயுத் தொல்லை, குடல் சம்பந்த மான பிரச்னைகள் ஏற்படாது. சருமம் மெருகேறும். பலவிதமான நோய்கள் வராமல் தடுக்கப்படும். மாதம் ஒருநாள் உபவாசம் இருந்தாலே போதும். போதுமான பயிற்சி இருப்பவர்கள் வாரம் ஒருமுறை கூட உபவாசம் இருக்கலாம். எதையும் முழுமையாக உணர்ந்து செய்தால் முழு பலன் தரும்’’ என்கிறார் டாக்டர் கௌசல்யா நாதன்.
விரதம் இருக்கும் போது நீர்ச்சத்து உள்ள பானங்களை நிறைய எடுத்துக் கொள்ளாவிட்டால் உடலில் உள்ள கழிவுகள் அப்படியே தங்கி நோய்களை ஏற்படுத்தும். முறையான விரதத்தில் 5 வகைகாய்கறிகள், 5 வகை பழங்கள், தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு, அரைமணி நேரம் நடைப்பயிற்சியோடு,8 மணி நேர தூக்கமும் பெற்றால், உடல் புத்துணர்வு பெறும். Endorphins எனப்படும் ஹார்மோனின் அளவு அதிகமாவதால் உணர்வுகள் நல்ல நிலையில் இருக்கும்.
நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.
நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம்