வி. மே 22nd, 2025

Views: 205

இந்த பூமி பந்தில் மனிதர்கள் மட்டும்மல்ல, பூரன், பூச்சி முதல் காண்டாமிருகம் வரை அனைத்துவிதமான காட்டு, நாட்டு விலங்கினங்களும், பறவைகளும், கடல் வாழ் உயிரினங்களும் வாழக்கின்றன. மனிதன்க்கு இந்த உலகத்தில் வாழ எவ்வளவு உரிமையுள்ளதோ, அதே அளவுக்கு, ஏன் அதை விட அதிகமான உரிமை மற்ற உயிரினங்களுக்கும் உள்ளது. ஆனால், இந்த பூமி நமக்கு மட்டுமே என்கிற நினைப்பில் வாழ்வது மனித இனம் மட்டுமே. மற்ற எந்த உயிரினமும் இங்கு நாம் மட்டுமே வாழ வேண்டும் என நினைப்பதில்லை. பார்க்கும் இடம்மெல்லாம் நம்முடையதாக இருக்க வேண்டும் என்கிற நினைப்பு மனிதனிடத்தில் மட்டுமே உண்டு.

மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 இல் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

உலகில் ஆயிரக்கணக்கான தாவர இனங்கள், ஆயிரத்துக்கும் அதிகமான பாலுட்டி இனங்கள், பறவையினங்கள், நீரிலும் – நிலத்திலும் வாழும் உயிரினங்கள் உள்ளன. இதில், சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான உயிரினங்களின் இனங்கள் வெகுவேகமாக அழிந்து வருகின்றன, இருப்பவையும் வாழ முடியாமல் தவிக்கின்றன என்கின்றது ஒரு அறிக்கை. இந்தியாவில் அழியும் எண்ணிக்கை அதிகம்.

உலக மக்களிடம், இந்த பூமி பந்தில் நாம் வாழ எந்தளவுக்கு உரிமையுள்ளதோ அதே அளவுக்கு மற்ற உயிர்களுக்கும் பங்குள்ளது என பிரச்சாரம் செய்தது. அந்த பிரச்சாரம் மேற்கத்திய நாடுகள், ஆப்ரிக்க நாடுகளில் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்தியது, அரசாங்கமும் அதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன. ஆசிய நாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு அதில் கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மனித இனத்தை தவிர மற்ற உயிரினங்கள் வாழ, அதன் இனப்பெருக்கம் அதிகரிக்கும் விழிப்புணர்வு நாளாக 2000த்திற்க்கு முன்புவரை உலக பல்லுயிர் பெருக்க தினமாக டிசம்பர் 29ந்தேதியை உலக நாடுகள் கடைப்பிடித்து வந்தன. 2000த்தில் நடைபெற்ற ஐநாவின் உலக புவி வெப்பமயமாதல் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி மே 22ந்தேதியை உலக உலக பல்லுயிர் பெருக்க தினமாக உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். உலக நாடுகளில் பல்லுயிர் பெருக்கத்தில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

விவசாயி விதைப்பதால் மட்டுமே பயிர் விளைந்துவிடுவதில்லை. அந்தப் பயிருக்குத் தேவையான சத்துகளை நுண்ணுயிர்கள் கொடுக்கின்றன. மகரந்தச்சேர்க்கை தேனீக்கள் மூலமாக நடக்கிறது. பயிருக்குத் தீமை செய்யும் பூச்சிகளை, நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கின்றன. இப்படி நமக்குத் தெரியாமலே உதவும் உயிர்கள் அனேகம் இருக்கின்றன. இப்படி ஒவ்வொரு செயலும், உயிர் தொகுப்பினாலேயே நிகழ்கிறது. அப்படிப்பட்ட உயிர் தொகுப்பைத்தான் பல்லுயிர் பெருக்கம் அல்லது உயிரியல் சமநிலை என்கிறார்கள்.

பயோடைவர்சிட்டி என்பது உயிர்தொகுப்பு மட்டுமல்ல.. மண், மலை, நிலம், நிலத்தடி நீர், புல், பூண்டு என எல்லாம் சேர்ந்ததுதான்.
சுற்றுச்சூழலில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குக் காரணமான நாம்தான், அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட வேண்டும். போனவையெல்லாம் போகட்டும். இனியாகிலும், மலைகளை மலைகளாக இருக்க விடுவோம். செடி,கொடி, மரம், காடு, காட்டுயிர்கள் என அனைத்தையும், அதன் இயல்பில் இருக்கவிடுவோம். இதற்கு நாம் பெரிதாக எந்த உதவியும் செய்யத்தேவையில்லை. உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் போதும். சின்னஞ்சிறிய பாக்டீரியா முதல், யானை வரை எண்ணிடலங்கா உயிர்களின் ஆதாரமாக விளங்கும் காடுகளுக்குள் பிளாஸ்டிக் பயன்பாடுத்தாமல் இருப்போம்.

இந்தியாவில் பல்லுயிர் பெருக்க ஆணையம் உள்ளது. இது 2003ல் தொடங்கப்பட்டது. பல்லுயிர் பெருக்க சர்வதேச அளவில் கொண்டுவரப்பட்ட நடைமுறைகள், சட்டத்திட்டங்கள், செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆணையம் இந்திய அரசுக்கு வழங்க வேண்டும், மற்ற உயிர்கள் அழியாமல் காப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது போன்றவற்றை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றை செய்ய வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

eighteen − eleven =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.