Views: 32
உலகில் உள்ள கடல் பகுதியில் மிகவும் ஆழமானது மரியானா அகழி என்று அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 11 கிலோமீட்டர் ஆழம் கொண்டது. இந்த பகுதி வடக்கு பசிபிக் பெருங்கடல் மரியானா தீவுக்கு அருகில் உள்ளது.
உலகில் மிகப்பெரிய ஆல மரம் கொல்கத்தாவில் உள்ள தாவர இயல் பூங்காவில் அமைந்துள்ளது. இது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழுதுகள் கொண்டது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த மரம் பரவி இருக்கிறது.
உலகில் உள்ள உயரமான சிகரங்களில் 7 சிகரங்கள் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது.