ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 63

 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதத்திலும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் விதத்திலும், வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கிலும் மே 11ம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மே 11ல் என்ன நடந்தது:ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் 1998 மே 11ம் தேதி, இந்தியா மூன்று அணுகுண்டு சோதனைøயும், மே 13ம் தேதி இரண்டு அணுகுண்டு சோதனைøயும் வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாளே “தேசிய தொழில்நுட்ப தினமாக’ அறிவிக்கப்பட்டது. இன்றைய தினம் நாட்டின் தலைநகரான புதுதில்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்குவதும் வழக்கமானது.

விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில், இந்தியா சிறப்பாக முன்னேறி வருகிறது. உள்நாட்டு தயாரிப்பிலேயே “கிரையோஜெனிக்’ இயந்திரத்தை உருவாக்கு வதில், நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. மேலும் பசுமைதொழில்நுட்பம், கல்வி, தண்ணீர் சேமிப்பு, மரபுசாரா எரிதி உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் விவசாயத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்துவது போன்றவற்றில் நாம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

3 + eleven =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.