வி. மே 22nd, 2025

Views: 100

ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters’ Day (IFFD) ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தீயணைப்புப் படையினர் தினம் கொண்டாடி வந்தனர். 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக, உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4ம் நாள் சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகக் பின்பற்றப்படுகிறது. தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்களின் பணி மிக விசாலமானது.. ஆனால், இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படுவதில்லை. இயற்கை சேதங்களினாலோ அல்லது விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரியது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி தன்னலமானது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும் மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின்போதும், அதே போல சகல தீ அனர்த்தங்களின் போதும் இவர்களின் செயற்பாடானது பாராட்டத்தக்கதாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

nineteen − nine =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.