Views: 177
- இரண்டு அப்பாக்கள் தங்களுடைய மகன்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்தனர். ஒருவர் தன் மகனுக்கு 150 ரூபாயும், மற்றொருவர் 100 ரூபாயும் கொடுத்தார்கள். இரண்டு மகன்களும் சேர்ந்து தங்கள் கையிருப்பை எண்ணிப் பார்த்தபோது, மொத்தமாகவே 150 ரூபாயே இருந்தது. இது எப்படி சாத்தியம்?
- ஒரு விமானம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு 1 மணி 20 நிமிடங்களில் சென்று சேர்கிறது. ஆனால், அதே ஊரிலிருந்து திரும்பி வருவதற்கு 80 நிமிடங்களே ஆகிறதாம். இது எப்படி நடக்கும்?
Answer:
1. அப்பாக்களில் ஒருவர், மற்றொருவரின் மகன் என்பதுதான் இதில் உள்ள ரகசியம். இங்கே சொல்லப்பட்டிருப்பது தாத்தா, அப்பா, மகன் ஆகிய மூன்று பேரைப் பற்றி மட்டுமே. மொத்தம் நாலு பேர் கிடையாது. தாத்தா, தன் மகனுக்கு 150 ரூபாய் கொடுக்கிறார். அதிலிருந்து அப்பா (தாத்தாவின் மகன்), மகனுக்கு (தாத்தாவின் பேரனுக்கு) 100 ரூபாயைத் தருகிறார். எனவே, மொத்தமாக 150 ரூபாய்தான் இருக்கும்.
2. 80 நிமிடங்களும் 1 மணி 20 நிமிடங்களும் ஒன்றுதான்.