வி. மே 22nd, 2025

Views: 237

உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை வளர்ந்து வரும் வேகமான காலத்தில் காப்பதற்காக ஏப்ரல் 18 ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day). அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்., 18ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது.    அது சரி..இந்த உலக பாரம்பரிய நாள் தோன்றியதை கொஞ்சம் விளக்க முடியுமா? என்று கேட்பவர்களுக்கான பதில் இதோ: 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் “சர்வதேச நினைவிடங்கள் தினமாக “International Day for Monuments and Sites” கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.”World Heritage Day”.
இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு பரிந்துரைத்தது. அதன் படி இந்நாளில்
கட்டிட பெருமைகளைக் கண்காட்சிகள் அமைத்து விவரிப்பது
கட்டணம் ஏதுமில்லாமல் இந்த ஒரு நாள் நினைவிடம், அரும் பொருளகம்(Monument), தலங்களுக்கு மக்களை அனுமதிப்பது
இந்த நாள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது
பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது
புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள்(Stamps), போன்றவற்றை அச்சிடுவது
பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது
பள்ளி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலு.ம் நிகழ்ச்சிகள் நடத்துவது.

இந்தியாவில் மட்டும், யுனெஸ்கோ ஒப்புக்கொண்ட 32 நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அவற்றில், வரலாற்று காலத்திற்கு முற்பட்ட ஓவியங்கள் உள்ள, பிம்பெட்கா (ம.பி.,), தொன்மை மிக்க அஜந்தா, எல்லோரா – எலிபெண்டா குடை வரைகள், பவுத்த சின்னங்களான சாஞ்சி, புத்த கயா- மஹாபோதி கோவில், பல்லவர் குடைவரை மற்றும் சிற்ப கலைகளின் சுரங்கமான மாமல்லபுரம், சோழர்களின் புகழ்பாடும் தஞ்சாவூர் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், விஜயநகர பேரரசின் உன்னத படைப்பான ஹம்பியிலுள்ள சின்னங்கள், இஸ்லாமிய பேரரசுகளின் கலை நயத்தை காட்டும் ஆக்ரா- – தாஜ்மஹால், டில்லி செங்கோட்டை, ஹுமாயுன் கல்லறை, குதுப்மினார், பதேபூர் சிக்ரி, கோவாவில் உள்ள தேவாலயங்கள், பட்டடக்கல் கோவில் கள், கஜுராஹோ கோவில்கள், கொனாரக் கோவில், ஜெய்ப்பூரிலுள்ள ஜந்தர் மந்தர் போன்றவை இடம் பெற்றுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

five × four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.