திங்கள். ஜூலை 28th, 2025

Views: 42

கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. சில கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது அல்ல உண்மை. பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பதை கடந்து, இதன் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. ஆகம சாஸ்திரங்களின் படி கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஒழி எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது. இது, உங்களுள் நல்ல ஆற்றல் பெருக செய்கிறது.. கோவில் மணி ஒலியின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமும் இருக்கிறது. ஆம், கோவில் மணி மனிதனின் மூளை செயற்திறன் மேலோங்க செய்யும் ஒரு அறிவியல் பின்னணி இருக்கிறது. கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கிறது. கோவில் மணிகள் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களால் ஆனவை ஆகும். இதில் இருந்து வெளிவரும் ஒலி மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றன. கோவில் மணியை அடித்தவுடன், அதிலிருந்து ஒரு கூர்மையான சப்தம் உற்பத்தியாகிறது, இந்த எதிரொலி குறைந்தபட்சம் 10 – 15 நொடி வரை நீடிக்கும். இந்த எதிரொலியின் காலம், உங்கள் உடலில் உள்ள ஏழு குணப்படுத்தும் மைய்ய புள்ளிகளை செயல்பட வைக்க போதுமானதாக இருக்கிறது. மேலும், இந்த ஒலி உங்களுள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றியும், உங்கள் கவன குவியல் சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. கோவில் மணி ஒலி, கவன குவியலை மேம்படுத்தி உங்களை விழிப்புடன் இருக்க செய்கிறது. மேலும், மூளையின் செயற்திறனை இதன் மூலம் அதிகரித்து, உங்கள் வேலையில் நேர்மறையாக செயல்பட செய்கிறது. இதன் மூலம் மனம் அமைதி அடையும், நிம்மதி பெறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

17 − 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.