வி. மே 22nd, 2025

Views: 206

செயற்கை சூரியன்
சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை ஜெர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை, உயர் சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் உருவாக்கியுள்ளனர் ஜெர்மனி விஞ்ஞானிகள். இதற்காக 149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி உள்ளனர். இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8×8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை பொருத்தி செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். இது 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் எனவும் கூறப்படுகிறது. சோதனை முயற்சியில் இருக்கும் இந்தப் புதிய கண்டுபிடிப்பு சூற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையமாகவும், ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் முயற்சி என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை விமான போக்குவரத்து மற்றும் ராக்கெட் துறையில் பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இப்போது பயன்பாட்டுக்கு வரவில்லை. வந்தால், இரவில் விளக்குக்கு வேலையில்லாமல் போய்விடும் என்கிறார்கள். இதே போன்று சுவிஸ் மத்திய தொழில்நுட்ப (EPFL)ஆராய்ச்சியாளர்களும் செயற்கை சூரிய ஒளி பற்றிய ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் சிம்ம  (Amazon Chime)
உலகளாவிய ரீதியில் வீடியோ மற்றும் குரவல் வழி அழைப்புக்கள் மட்டுமன்றி குறுஞ்செய்திகள், கோப்பு பரிமாற்றம் என்பவற்றினை இலவசமாக வழங்கும் சேவையாக ஸ்கைப் காணப்படுகின்றது. மிகவும் பிரபல்யமான இச் சேவையினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வருகின்றது. இப்படியிருக்கையில் இச் சேவைக்கு போட்டியாக அமேஷான் நிறுவனம் Amazon Chime எனும் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. வியாபார நிறுவனங்களை இலக்காகக் கொண்டு வழங்கப்படவுள்ள இச் சேவையின் ஊடாக அதி உயர் தரம் கொண்ட வீடியோ மற்றும் குரல் வழி அழைப்புக்களை மேற்கொள்ள முடியும். மேலும் டெக்ஸ்டாப் கணினிகள், iOS மற்றும் Android சாதனங்களின் ஊடாகவும் இச் சேவையினை பயன்படுத்த முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

19 + 17 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.