வி. மே 22nd, 2025

Views: 80

தோல்வி என்பது பெருங்காயம் போல… தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும் !
ஒரு குக்கரைப் போல இருங்கள்…. பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!
லட்சியமும் முட்டையும் ஒன்று …. தவற விட்டால் உடைந்து விடும்!!!
சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல…. கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!
வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!
பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!
கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!
தலைக்கனம்‬ என்பது வெந்நீர் போன்றது…அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.
தாமதமான‬ வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல…… அனுபவிக்க முடியாது!!
தன்னம்பிக்கைச்‬  சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல …சமைப்பது உங்கள் கையில்தான்!
வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது… வெந்தபின் தான் தெரியும்…
வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது…நட்பு என்ற சட்னி வேண்டும்..
படித்ததில்‬  ருசித்தது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

20 − 18 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.