Views: 471
மந்திரங்கள் என்று சொல்லப்படுபவை ஒலிக்கூட்டங்களாகும். ஒலிக் கூட்டங்கள் எப்படி மந்திரங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன என்று சிந்திக்க வேண்டும். உதாரணமாக ‘நமசிவாய’ என்ற ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வோமேயானால் அந்தச் சொல்லின் பொருளைச் சிந்திக்க வேண்டும். ‘சிவனை வணங்குகிறேன்’ என்ற பொருளுடையது நமசிவாய என்ற சொல். சாதாரணக் குழந்தைகூடப் புரிந்து கொள்ளக்கூடிய ‘சிவனை வணங்குகிறேன்’ என்ற இரண்டு சொற்கள் எப்படி சக்திவாய்ந்த மந்திரமாக மாறின என்பதை ஆழ்ந்து பார்க்க வேண்டும். கொள்ள முடிகிறது.
ஆயினும் நம்முடைய முன்னோர், பெரியவர்கள், ஞானிகள், தபசிகள், ரிஷிகள் ஆகியோர் நிறைமொழி பேசுபவர்களாக இருந்தார்கள். தொல்காப்பியனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மந்திரங்களைப் பற்றி ஆராய்ந்து மிகச் சிறந்த கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். “நிறைமொழி மாந்தர்” என்று இந்தப் பெரியவர்களுக்குப் பெயர் வைத்துள்ளார்.
சாதாரண சொற்களைத்தான் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சொற்களை எடுத்துக்கொண்டு அவர்கள் அவற்றைத் தம்முடைய ஆற்றல் காரணமாக, தம்முடைய சக்தி முழுவதையும் அந்தச் சொற்களில் ஏற்றி, ‘இவை மந்திரங்களாக ஆகக் கடவன’ என்று ஆணையிடுவதன் மூலம் அவற்றை மந்திரங்களாக மாற்றுகிறார்கள். இதனைத்தான் தொல்காப்பியனார்
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி…. என்று சொல்லியுள்ளார். இந்த ஆணையிடுதல் என்பது, குறைமொழியாக உள்ள எழுத்துக் கோவைகளை, சொற்கோவைகளை, சக்திபெற்ற மந்திரங்களாக மாற்றுவதுதான்.
பல சமயங்களில் அக்ஷரங்கள் என்று சொல்லப்படுகிற மந்திரங்களுக்குப் பொருளே இருப்பதில்லை. ஐம், ஹ்ரீம், க்லீம் என்ற பீஜ அக்ஷரங்கள் எல்லாவிதமான பொருளையும் தருவதில்லை. பொருளில்லாமல் சொற்கள் உண்டா என்று சிந்திக்க வேண்டும். பொருளில்லாமலும் சொற்கள் இருக்கலாம். ஆனால் அவை குறைமொழி மாந்தரால் பேசப்படும்போது அர்த்தமற்ற ஒலிக் கூட்டங்களாக மாறிவிடுகின்றன. ஆனால் நிறைமொழி மாந்தர் வேண்டுமென்று நினைக்கும் பொழுது அந்த அதிர்வுகளையுடைய எழுத்துகளை ஒன்று சேர்க்கிறார்கள். அப்படி ஒன்று சேர்த்த பிறகு – ஹ்ரீம் என்ற மந்திரத்தை உண்டாக்கிவிட்ட பிறகு அது அன்னையின் பூரண சக்தியைப் பெற்ற மந்திரமாக இருக்கிறதே தவிர அதற்கு மேல் பொருள் ஒன்றும் அதற்குத் தேவையில்லை.
சில மந்திரங்களை வீடுகளில் மட்டுமே உச்சரிக்க வேண்டும். சில மந்திரங்களை ஆலயங்களில் தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும். சில மந்திரங்கள் காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்க வேண்டும். சில மந்திரங்கள் திருமணம் ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும். ஆனால் ஆன்மிகத் தகுதி பெறாமல் மந்திரங்களை சொல்லக்கூடாது. இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்க
வேண்டும். தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 தடவை சொல்வது மிகவும் நல்லது. ஆலய பிரகாரங்களில் அமர்ந்து மந்திரங்களை சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு பலன்களை அள்ளித்தரும். மந்திரம் என்றதும் நிறைய பேர் என்னவோ… ஏதோ என நினைத்து பயந்து விடுகிறார்கள். சிலர் அது நமக்கு ஒத்து வராது என்று முயற்சி செய்யாமலே
விட்டு விடுகிறார்கள். சிலர் எல்லா மந்திரங்களும் சமஸ்கிருதத்தில்தானே இருக்கிறது. அதை உச்சரிக்க தெரியாது என்று நினைப்பார்கள்.