திங்கள். ஜூலை 28th, 2025

Views: 19

முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும். முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்:1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)

2.தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

  1. அமரும்போது வளையாதீர்கள்.

  2. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.

  3. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.

  4. சுருண்டு படுக்காதீர்கள்.

  5. கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்.

  6. டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.

  7. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்.

  8. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை திருப்தியை விட மேலான இன்பமுமில்லை

இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!
வாழ்க வளமுடன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

18 − two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.