Views: 84
மேஷ ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் அன்று முருகனை பூஜித்து சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும்.
ரிஷப ராசிக்காரர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிபட்டு சாப்பிட வேண்டும்.
மிதுன ராசிக்காரர்கள் புதன் அன்று வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டு வர வேண்டும்.
கடக ராசிக்காரர்கள் மாதுளம் பழத்தை வெற்றிலையில் வைத்து வெள்ளிக்கிழமைகளில் காளியை வழிபட்டு உண்ண வேண்டும்.
சிம்ம ராசிக்காரர்கள் வியாழன் தோரும் வெற்றிலையோடு வாழைப்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு உண்டால் துன்பங்கள் நீங்கும்.
கன்னி ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் மிளகு மற்றும் வெற்றிலை வைத்து இஷ்ட தெய்வத்தை பூஜித்து உண்ண வேண்டும்.
துலாம் ராசிக்காரர்கள் கிராம்பு மற்றும் வெற்றிலை வைத்து வெள்ளி அன்று இஷ்ட தெய்வத்தை வணங்கி உண்ண வேண்டும்.
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் அன்று வெற்றிலையோடு பேரிச்சம்பழத்தை வைத்து இஷ்ட தெய்வத்தை பூஜித்து சாப்பிட வேண்டும்.
தனசு ராசிக்கார்கள் வியாழக்கிழமைகளில் கற்கண்டு மற்றும் வெற்றிலை வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட வேண்டும்.
மகர ராசிக்காரர்கள் வெற்றிலையில் அச்சுவெல்லம் வைத்து சனிக்கிழமைகளில் காளி தேவியை வழிபட்டு உண்ண வேண்டும்.
கும்ப ராசிக்காரர்கள் வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளியை வழிபட்டு சாப்பிட வேண்டும்.
மீன ராசிக்காரர்கள் ஞாயிற்றுகிழமைகளில் வெற்றிலையோடு சர்க்கரை வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டு வர அனைத்து கவலைகளும் துன்பங்களும் நோயும் நீங்கும்.
*படித்தேன்; பகிர்ந்தேன்*