Views: 274
வணக்கம். இது ஒரு தொடர் பதிவு. முந்தய விடுகதை பதிவின் பதில்கள்
மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் – அது என்ன?நத்தை
பட்டனைத் தட்டினால் சட்டென விரியும் – அது என்ன?குடை
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?நீர்
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?நிலா
முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?ஆபத்து