உலகத் தொலைக்காட்சி தினம்
உலகத் தொலைக்காட்சி தினம் ( WORLD TELEVISION DAY ) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது. தெரு முனைகளிலும், வீட்டு முற்றத்திலும் கூடி பேசியவர்களை வீட்டிற்குள் அமரவைத்தது தொலைக்காட்சி தொடர்கள். திரையரங்களுக்கு சென்று படங்கள் பார்ப்பது குறைந்தது. தொலைக்காட்சித் தொடர்களை பலர் விரும்பி பார்த்ததால் அதன் ஊடே விளம்பரம் செய்வது பலன் தரும் என்று கருதினர் விளம்பரதாரர்கள். மக்கள், திரைப்படத்தின் இன்னொரு வடிவமாகத் தொலைக்காட்சியை இப்போது கருதுகிறார்கள். 1920 ஆம் ஆண்டு ஜோன் லொகி பெயாட் தொலைக்காட்சயை கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை… Read More