உலக ரேபிஸ் தினம்
ரேபிஸ் என்பது ஒரு வகையான வைரஸ். இது வௌவால், நரி, ஓநாய் மற்றும் நாய் ஆகியவற்றை எளிதில் தாக்கும். ரேபிஸ் தாக்கிய விலங்கு மனிதனைக் கடித்தால் இந்நோய் மனிதனை தாக்கிவிடும். ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு மன் இந்நோய்க்கு மருந்தே கிடையாது. உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இவரது மறைந்த நாளான செப்., 28ம் தேதி, உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால், உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர், சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 97 சதவீத ரேபிஸ் நோய், நாய்கள் மூலம் தான் பரவுகின்றன. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் நாய்கள் உள்ளன. அதில் 60 சதவீதம் தெருவில் திரியும் நாய்களாகவும், மீதி வீட்டில் வளர்க்கும் நாய்களாகவும் உள்ளன என… Read More