உலக குடும்ப நாள்
இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் "விரிசல்' உருவாகிறது. ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சர்வதேச குடும்ப தினம் மே 15 அன்று அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது. குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டுள்ளது.Read More Read More