சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138[2] மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது. குழந்தைகள் இளம் வயதில் குற்றங்கள் செய்வதை தடுத்து அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1986 ஆம் ஆண்டு குழந்தைகள் நீதி சட்டத்தை இயற்றியது. மேலும் பல லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளிலும், விளையாட்டு திடல்களிலும் இருக்க வேண்டிய நேரத்தில், தொழிற்சாலைகளிலும் பண்ணைகளிலும், செங்கற் சூளைகளிலும், சுரங்கங்களிலும் வேலை செய்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டே உலகில் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 21 கோடி பேர் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். இதில் 11 கோடி பேர் பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. Read More Read More