உலக வன விலங்குகள் தினம்
உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1931 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் வனவிலங்குகள் தினம் முதன்முதலாக கொண்டாடபட்டது, பின் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற நூற்றாண்டில் 40,000 புலிகள் வாழ்ந்துள்ளன. தற்போது 1,750 புலிகள் மட்டுமே வாழ்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. வன விலங்குகள் ஒரு நாட்டின் விலை மதிப்பற்ற செல்வம். உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே, டைனோசர் முதல் பல்வகை அரிய வனவிலங்குகள் காடுகளை ஆட்சி செய்து வந்துள்ளன. படிப்படியாக மனித இனம் உலகில் அதிகரித்ததால், காடுகளில் சுதந்திரமாக… Read More